• Fri. Apr 19th, 2024

கூட்டணிகளின் இடங்களை தட்டி பறித்த திமுக தலைகள்

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மறைமுக வாக்கெடுப்பில் பல்வேறு நகராட்சி, பேரூராட்சிகளில் கூட்டணி கட்சிகள் வெல்ல திமுகவினர் வெற்றிபெற்றுள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை திமுகவினர் பிடித்துள்ளனர்.

திமுகவின் கூட்டணி கட்சிகள் இடையே இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று கூட்டணி கட்சிகளுக்கான இடஒதுக்கீடு அறிவிப்பை திமுக வெளியிட்டது. கும்பகோணம் மேயர் பதவி காங்கிரசுக்கு வழங்கப்பட்டது. பல்வேறு துணை மேயர், நகராட்சி தலைவர் பதவிகள் கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் பல்வேறு பல்வேறு நகராட்சி, பேரூராட்சிகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக வேட்பாளர்கள் எதிர்ப்பு போட்டியிட்டு தலைவர் பதவிகளை கைப்பற்றி உள்ளனர். திமுக கூட்டணி கட்சிகளை இந்த சம்பவம் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

அதன்படி தருமபுரி பொ. மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளரை வீழ்த்தி திமுக வேட்பாளர் வெற்றிபெற்றார். இந்த பேரூராட்சி தலைவர் பதவி விசிகவிற்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் இவரை வீழ்த்தி திமுகவின் சாந்தி புஷ்பராஜ் வெற்றிபெற்று இருக்கிறார். இதனால் அங்கு இருந்த விசிக சார்பாக நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டம் செய்து வருகின்றன.

கடலூர் மங்கலம்பேட்டை பேரூராட்சி தலைவர் தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி திமுக வெற்றி பெற்றது. மங்கலம்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவி காங்கிரசுக்கு திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டு இருந்தது . காங்கிரஸ் வேலமுருகன் இங்கு 7 வாக்கு பெற்ற நிலையில் திமுகவின் சம்சாத் பேகம் 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கொடுத்த வாக்கை திமுக காப்பாற்றவில்லை என்று கூறி காங்கிரஸ் கட்சியினர் திமுகவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளது. அங்கு கடுமையான சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதேபோல் திருப்பூர் திருமுருகன் பூண்டி பேரூராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை வீழ்த்தினார் திமுக வேட்பாளர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பிரமணியத்தை திமுக வேட்பாளர் குமார் தோற்கடித்தார். கூட்டணிக்கு திமுகவினர் துரோகம் செய்து விட்டதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்த பதவி சிபிஎம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.இதே போன்று காங்கேயம் மாநகராட்சி தலைவர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் திமுகவின் சூர்யபிரகாஷ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஹேமலதாவுக்கு யாரும் முன்மொழியாததால் திமுக சார்பில் சூர்யபிரகாஷ் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

இன்னொரு அப்பக்கம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவராக விசிகவை சேர்ந்த சுமதி திமுக கூட்டணி போட்டியின்றி தேர்வானார். ஆனால் நெல்லைக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி விசிகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அங்கு திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட விசிக வேட்பாளரை வீழ்த்தி திமுக வெற்றி பெற்றுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக வேட்பாளர் ஜெயந்தி 23 வாக்குகள் பெற்று இங்கு வெற்றிபெற்றார் . இங்கு விசிக வேட்பாளர் கிரிஜாவிற்கு 3 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.

தேனி நகராட்சி தலைவர் தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். இந்த நகராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அங்கு திமுகவினர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து காங்கிரஸ் சற்குணத்தை எதிர்த்து திமுகவின் ரேணுப்பிரியா வெற்றிபெற்றார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க குமரி மாவட்ட குளச்சல் நகராட்சியில் திமுகவிற்கு உள்ளேயே மோதல் ஏற்பட்டுள்ளது. அங்கு திமுக வேட்பாளரை வீழ்த்தி இன்னோரு திமுக வேட்பாளர் வெற்றி. திமுக அறிவித்த ஜான்சன் சார்லசை வீழ்த்தி திமுக போட்டி வேட்பாளர் நசீர் தலைவராக தேர்வு பெற்றுள்ளார். இப்படி பல இடங்களில் திமுக வேட்பாளர்கள் தலைமை அறிவித்த வேட்பாளர்களை தேர்வு செய்யாமல் வேறு தலைவர்களை தேர்வு செய்தது, கூட்டணி கட்சிக்கு வாக்களிக்காமல் மாறி வாக்களித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தேர்தலில் காங்கிரசை வீழ்த்திய திமுகவை சேர்ந்தவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். தலைமை கழகம் அறிவித்த ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி சேர்மன் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் செல்வமேரி அருள்ராஜ் போட்டியிட்டார்.இந்நிலையில் கூட்டணி தர்மத்தை மீறி திமுக வேட்பாளர் சாந்தி சேர்மன் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து மொத்தம் 15 வார்டுகளில் 11 வாக்குகள் பெற்று ஸ்ரீபெரும்புதூர் சேர்மன் பதவியை கைப்பற்றினார் . வெறும் 4 வாக்குகள் மட்டுமே பெற்று காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியடைந்தார். இதனால் கூட்டணி தர்மம் மீறப்பட்டதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் ஸ்ரீபெரும்புதூர் பேரூ ராட்சி அலுவலகம் முன்பு தற்போதுஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் கருமத்தப்பட்டி நகராட்சித்தலைவர் தேர்தலில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அங்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து திமுக வேட்பாளர் மனுதாக்கல் செய்தார். கடைசியில் திமுக கவுன்சிலர்கள் எல்லோரும் திமுகவிற்கே ஆதரவாக வாக்களிக்க காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். இதேபோல் பல நகராட்சிகளில் கூட்டணி வேட்பாளர்களை திமுகவினர் தோற்கடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திமுக கூட்டணி தர்மத்தை மதிக்காமல் போனதா இல்லையென்றால், திமுக தலைமைக்கு எதிராக கட்சியினர் மாரிவிட்டன்ரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *