• Thu. Apr 25th, 2024

பாமக வழியில் பாயும் தேமுதிக.. டிடிவி தினகரனுக்கு கொடுத்த கடுக்கா!

By

Sep 15, 2021 ,

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும் 2 கட்டங்களாக, அதாவது அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே அதிமுக கூட்டணியிலிருந்து பாமக தனித்து கூட்டணி என்று அறிவித்துள்ள நிலையில், தற்போது தேமுதிகவும் அதே நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2021- 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனித்து போட்டியிடுகிறது, போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும் கழகத் தொண்டர்களும் ஊரக உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்களை 16-9-2021, 17-9-2021 ஆகிய 2 நாட்கள் காலை 10 மணியிலிருந்து அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்கள் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் 4 ஆயிரமும் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் 2000 கட்டணம் செலுத்த வேண்டும் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாமக தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது தேமுதிகவும் தனித்து போட்டியிட உள்ளது ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடும் போட்டியை உருவாக்கியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக டி.டி.வி. தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *