• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸ் நீக்கம்?இடைக்காலபொதுச்செயலாளராக எடப்பாடிபழனிசாமி தேர்வு

ByA.Tamilselvan

Jun 27, 2022

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை நாளுக்கு நாள் வலுத்துவருகிறது. ஓபிஎஸ்,இபிஎஸ் இருவரிடையே மோதல் போக்கு அதிகரித்துவருகிறது. கட்சியில் இபிஎஸ்க்கு ஆதரவு அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. கடந்த 23ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு எந்த முடிவும் எட்டப்படவில்லை.மீண்டும் ஜூலை 11க்கு பொதுக்குழு நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றுவருகிறது . இந்த கூட்டம் செல்லாது என ஓபிஎஸ் அறிவித்துள்ளார். அதிமுக பொருளாளர் பதிவியிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்படுவதாக தகவல் நேற்று வெளியானது. ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதாக இபிஎஸ் தரப்பு அறிவித்த நிலையில் அதிமுகவின் இடைக்காலபொதுச்செயலாளராக எடப்பாடிபழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.