• Thu. Apr 25th, 2024

தென்காசியில் பனை மரங்கள் வெட்டப்படும் அவலம் – காற்றில் பறக்கும் அரசின் உத்தரவு!..

Byமதி

Oct 7, 2021

நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு தமிழக பட்ஜெட்டில் பனைகளை வெட்ட தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தவிர்க்க முடியாத காரணத்திற்காக மட்டும் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்ற பின்னரே பனைகளை வெட்டும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்தி இரவு பகல் பாராமல் சூளைகளை இயக்கி வருகின்றனர். இந்த செங்கல் சூளைகளுக்கு முக்கிய எரிபொருளாக பனைகளை வெட்டி பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பட்ஜெட்டில் பனைகளை வெட்ட தடை பிறப்பித்த பின்னரும் தாறுமாறாக பனைகளை வெட்டி எரிபொருளுக்கு பயன்படுத்துகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் இரவோடு இரவாக லாரிகளில் பனை மரங்கள் வெட்டி எடுத்து வரப்படுகிறது.
வருவாய்த்துறையினரோ, காவல் துறையோ, வனத்துறையோ இதனை கண்டு கொள்வதில்லை. இது குறித்து பல முறை புகார்கள் அளித்தும் நிரந்தர தீர்வோ நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை.

எனவே தென்காசி மாவட்டத்தில், குறிப்பாக சூளைகள் நிறைந்த கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் பனைகளை வெட்டுவதை தடுக்கவும், லாரிகளில் ஏற்றிச்செல்வதை தடுத்து சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் துரித ஏற்பாடு செய்து தேசிய சின்ன அவமதிப்பை தடுக்க வேண்டும், என பனைவாழ்வியல் இயக்கம் தலைவர் பா.ஜான்பீட்டர் மனு அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *