• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் எம். எஸ்.பி.பள்ளியில் அறிவுசார் கண்காட்சி..,

ByS.Ariyanayagam

Apr 25, 2026

திண்டுக்கல், MSP-ஆடிட்டோரியத்தில் கல்வி& விளையாட்டு மற்றும் அறிவு சார் நுழைவு கண்காட்சி பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் ஏராளமான பெற்றோர்கள் பங்கேற்றனர்.

திண்டுக்கல், MSP-ஆடிட்டோரியத்தில் JCI மற்றும் B-Evole இணைந்து வழங்கும் கல்வி& விளையாட்டு மற்றும் அறிவுசார் நுழைவு கண்காட்சி இன்றும் மற்றும் நாளை நடைபெறுகிறது. இந்த நுழைவு கண்காட்சியில் பள்ளிகள் மற்றும் பொறியியல், கலை, அறிவியல், மேலாண்மை போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல கல்லூரிகள் ,மற்றும் பள்ளிகள் தங்கள் படிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன.

இந்த கல்வி மற்றும் விளையாட்டு கண்காட்சி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் உயர்கல்வி வாய்ப்புகள், புதிய கல்வி தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில் வழிகாட்டுதல்களை ஒரே கூரையின் கீழ் அறிந்துகொள்ளும் வாய்ப்பாக உள்ளது.திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரி நிறுவனங்களும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளனர் தங்களது குழந்தைகளுக்கு தேவையான கல்வி மற்றும் விளையாட்டு தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளும் விதமாக இந்த கண்காட்சியானது நடைபெற்று வருகிறது பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு பல்வேறு தகவல்களை பெற்று செல்கின்றனர்.

மேலும் தங்களது குழந்தைகளை சார்ந்த தகவல்கள் தெரியாமல் பெற்றோர்கள் அலைந்து திரிந்து சில சிக்கல்களில் சிக்கும் நிலையில் இது போன்ற கல்வி சார்ந்த விளையாட்டு சார்ந்த எக்ஸ்போக்கல் மூலமாக நல்ல தகவல்கள் கிடைக்கப்பெற்று கல்வியில் உயர்ந்து விளங்குவதற்கு இந்த கண்காட்சி உதவும் என்பது கல்வியாளர்களின் கூற்றாக உள்ளது .