• Tue. Nov 24th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெறும் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை..,

ByK Kaliraj

Nov 24, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கோமாளிபட்டியில் மாரீஸ்வரன் என்பவரது ஆட்டு தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் கடந்த வாரம் வனவிலங்கு தாக்கியதில் ஏழு ஆடுகள் பலியானதாக கூறப்படுகிறது.

ஐந்துக்கும் மேற்பட்ட ஆடுகள் காயம் அடைந்தன. அப்போது முதல் தொடர்ந்து கிராமத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக கோமாளிபட்டி கிராம மக்கள் அச்சத்துடன் இருந்து வந்தனர். தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.அதன் பேரில் கோமாளிபட்டி நுழைவு வாயில் மற்றும் மாரீஸ்வரன் ஆட்டுத்தொழுவம் இருக்கும் இடத்தின் அருகிலும் இரண்டு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இந்த நிலையில் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு கடைகள் இருந்த பகுதியில் சிறுத்தை நடமாடுவது போன்றும், கோமாளி பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வளாகத்தில் சர்வ சாதாரணமாக சிறுத்தை நடந்து செல்வது போன்று இணையதளத்தில் படங்கள் வெளிவந்தன.

இதனால் சுற்று வட்டார பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டது. இரவு நேரங்களில் உறங்காமல் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இதுகுறித்தும் சிவகாசி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதன் பேரில் சிவகாசி வனச்சரக அலுவலர் சக்திவேல் தலைமையில் வனத்துறையினர் நேற்று நள்ளிரவு பட்டாசு கடைகள் இருக்கும் பகுதி மற்றும் பட்டாசு ஆலை வளாகம் உள்பட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து விஜய கரிசல் குளம் நிறை பாண்டிய அய்யனார் கோவில் வளாகத்தில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்ததில் சிறுத்தை மற்றும் வேறு ஏதும் வனவிலங்கு நடமாட்டம் இல்லாதது உறுதி செய்யப்பட்டது.

இணையதளத்தில் பதிவிட்ட இளைஞர்களை அழைத்து இணையதளத்தில் இது போன்று அச்சுறுத்த கூடிய தவறான தகவல்களை பதிவு செய்யக்கூடாது என எச்சரிக்கை செய்தனர் .மீண்டும் இவ்வாறான தகவல் பரப்ப கூடாது எனவும் கேட்டுக்கொண்டனர். இருப்பினும் கோமாளிபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெறும் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் வனச்சரக அலுவலர் சக்திவேல் தெரிவித்தார்.