விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் இலவச கண்புரை பரிசோதனை முகாம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் உதவியுடன் அலையன்ஸ் கிளப் ஆப் சிவகாசி மற்றும் மதுரிதா அறக்கட்டளை மற்றும் சங்கரா கண் மருத்துவமனை கிருஸ்ணன் கோவில் இணைந்து வெம்பக்கோட்டையில் உள்ள சிபியோ உண்டு உறைவிடப்பள்ளி ல் இலவச கண்புரை பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இலவச பரிசோதனை முகாம் அலை. மாதவன் தலைவர், அலை. குமரேசன் செயலாளர், அலை. சுரேஷ் குமார், அலை. கார்த்திகேயன், அலை. விமல், அலை. மீனா, மற்றும் சிபியோ உண்டு உறைவிடப் பள்ளி நிர்வக இயக்குனர் கோவிந்தன் மற்றும் சங்கரா கண் மருத்துவ மனை கிருஷ்ணன் கோவில் மருத்துவ குழுவினர் இவர் தலைமையில் இலவச கண்புரை பரிசோதனை முகாம் நடைபெற்றது.

மருத்துவ முகாமில் கலந்து கொண்டவர்கள் -56 நபர்கள். அறுவை சிகிச்சைக்கு தேர்வு பெற்றவர்கள் -23 நபர்கள். இந்த முகாம் ஏற்பாடு செய்தவர் மதுரிதா அறக்கட்டளை நிறுவனர் சந்திர சேகரன் ஏற்பாடு செய்தார்.



