• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் காங்., மண்டல தலைவர் திமுகவில் இணைப்பு..,

ByS.Ariyanayagam

May 6, 2026

திண்டுக்கல் காங்கிரஸ் மண்டலத் தலைவர் திமுக வில் இணைந்தார்.
திண்டுக்கல் மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவரும், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவருமான கார்த்திக் இன்று மாலை கலைஞர் மாளிகை திமுக அலுவலகத்தில்
மாநகர திமுக செயலாளர் ராஜப்பா முன்னிலையில் தன்னை திமுக வில் இணைத்துக்கொண்டார்.

இந்நிகழ்வில் மேயர் இளமதி, மாவட்ட துணை செயலாளர் பிலால் உசேன், மாநகர துணை செயலாளர் அழகர்சாமி, பொருளாளர் மீடியா சரவணன், பகுதி பொறுப்பாளர்கள் ராஜேந்திரகுமார், பஜ்லுல் ஹக், சந்திரசேகர், சூசை ராபர்ட், மண்டல தலைவர்கள் ஆனந்த், ஜான் பீட்டர், மாவட்ட பிரதிநிதிகள் அஞ்சல் கணேசன், ஆனந்த்குமார், ஏ.வி.குமார், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் தினேஷ், பாலகிருஷ்ணாபுரம் பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.