• Wed. Sep 23rd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

வலிமை படத்தில் யோகி பாபு நடித்திருந்தாரா?

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபு நடிப்பதாக டிவிட்டரில் அறிவித்திருந்தார். ஆனால் படத்தில் அவருடைய காட்சி ஒன்று கூட வரவில்லை. யோகியின் காட்சிகள் படத்தின் நீளம் காரணமாக கட் செய்யப்பட்டு இருக்கலாம் என்று ஒரு சிலரும், ஒரு சிலர், படக்குழு அவரின் காட்சிகளை வேண்டுமென்றே நீக்கி உள்ளதாகவும் யோகி பாபுவின் சம்பளம் மற்றும் கால் ஷீட் பிரச்சனை காரணமாகவே இதை செய்திருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்…

இதற்கிடையில், வலிமை படத்தில், யோகி பாபு வரும் ஒரே ஒரு காட்சியை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். படத்தின் ஓப்பனிங் பாடலான நாங்க வேற மாறி பாடலில் அஜித் ஆடிக்கொண்டு இருக்கும்போது பின்னால் கூட்டத்தில் ஒருவராக நின்றுகொண்டு இருக்கிறார் யோகி பாபு. அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.