இயக்குனர் மற்றும் பாடலாசியரான கங்கை அமரன் சமீபத்தில் விழா மேடை ஒன்றில், விஜய்யைப் பற்றி பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
நடிகர் விஜய்க்கும் அவரது பெற்றோருக்கும் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு உள்ளது.. இதற்கு, எஸ்.ஏ.சந்திரசேகர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுதான் காரணம் என்றும், இதனால் விஜய் தனது பெற்றோருடன் பேசுவது கூட இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் இசை வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்ட பாடலாசிரியரும், இயக்குனருமான கங்கை அமரன் இந்த விஷயத்தில் விஜய் செய்தது தனக்கு வேதனை அளித்ததாகக் கூறியுள்ளார். விழாவில் பேசும்போது ‘விஜய் அவரது பெற்றோர்களை தள்ளிவைத்தது வேதனையாக இருந்தது. நாங்கள் எல்லாம் பெரியவர்கள் அப்படிதான் விமர்சனம் செய்வோம்.
பல வருடங்களுக்கு முன் நாங்களெல்லாம் எஸ்.ஏ.சி நாடகங்களுக்கு வாசிப்போம். அப்போது விஜய் சின்ன குழந்தையாக இருப்பார் அவரைக் கொஞ்சிவிட்டு வருவோம். அவரை எப்படி எல்லாம் எஸ்.ஏ.சி வளர்த்தார் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் அந்த செய்தியைக் கேட்டதும் எனக்கு எரிச்சலாக இருந்தது. ரசிகர்கள் அனைவரும் அவரிடம் எடுத்து சொல்லுங்கள்’ எனப் பேசியுள்ளார்.