• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

பீஸ்டை ஓரம்கட்டியதா கேஜிஃஎப் 2?

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளனர். படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்த நிலையில் படம் எதிர்பார்த்த அளவிற்கு நன்றாக இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று கேஜிஎப் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, கேஜிஎப் 2 மற்றும் பீஸ்ட் 2 திரைப்படத்திற்கும் போட்டி இருப்பதாக கூறப்பட்ட நிலையில், கேஜிஎஃப் 2 திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், பீஸ்ட் படத்திற்கு நிறைய கூட்டம் வராத காரணத்தால் பல திரையரங்குகள் கேஜிஎப் 2 திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும், இதனால் பல நாட்கள் ஓடும் என்று எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் திரைப்படம் வெளியாகிய இரண்டு நாட்களிலேயே தியேட்டரை விட்டு வெளியேறுவதாக கூறப்படுகிறது.