தெலுங்கில் பிரபலமாக இருக்கும் ஓடிடி நிறுவனங்களில் ஒன்றான ‘ஆஹா ஓடிடி இன்று முதல் தமிழிலும் இயங்க உள்ளது. தமிழ் ஓடிடி ஓடிடி செயலியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் புதிய தமிழ் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இதுகுறித்து தமிழக முதல்வரின் மகன் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘ஆஹா தமிழ்’ ஓடிடி ஆப்-பை தொடங்கிவைத்து திரைத்துறை வளர்ச்சிக்கு பங்காற்றிய கலைஞர்களை கௌரவித்த நிகழ்வில் கலந்துகொண்டோம். திரைப்படம், வெப்சீரிஸ் உள்ளிட்ட மிகச்சிறந்த பொழுதுபோக்கை ரசிகர்களுக்கு வழங்கி வெற்றிபெற ஆஹா தமிழுக்கு வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார்.