


நடிகர் அருள்நிதியின் படங்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உண்டு! தன்னுடைய சிறப்பான கதைத்தேர்வு மற்றும் இயக்குநர் தேர்வு உள்ளிட்டவற்றால் சிறப்பான பல படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். அவரது வம்சம், மௌன குரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், கே 13 உள்ளிட்ட படங்கள் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.
இந்நிலையில் பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் டைரி படத்தில் இவர் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பவித்ரா மாரிமுத்து அருள்நிதிக்கு ஜோடியாகியுள்ளார். இந்நிலையில் இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு மாயா, கேம் ஓவர் படங்களுக்கு இசையமைத்துள்ள ரான் யோஹன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். முன்னதாக படத்தின் டீசர் வெளியாகி மிரட்டலாக அமைந்திருந்தது.


