• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

விஷால், எஸ்.ஜே சூர்யா இணையும் ‘மார்க் ஆண்டனி’!

விஷாலின் ‘எனிமி’ படத்தைத் தயாரித்த எஸ் வினோத்குமாரின் மினி ஸ்டுடியோ நிறுவனம், விஷாலின் 33வது படமான ‘மார்க் ஆண்டனி’ படத்தை, தயாரிக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார். விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் எஸ்ஜே சூர்யா, சுனில் வர்மா ,நிழல்கள் ரவி ஆகியோர் நடிக்கிறார்கள் .

ஜி வி பிரகாஷ்குமார் இசையமைக்க, அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கனல் கண்ணன், பீட்டர் ஹெயின் , ரவிவர்மா ஆகியோர் இணைந்து சண்டைப்பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள் . கலை இயக்கம் உமேஷ் ராஜ்குமார் .

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கியது .

தொழில் நுட்பக்குழு :
எழுத்து & இயக்கம் -ஆதிக் ரவிச்சந்திரன்
தயாரிப்பு – S வினோத்குமார் மினி ஸ்டுடியோ
இசை – ஜி வி பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு – அபிநந்தன் ராமானுஜம்
படத்தொகுப்பு – விஜய் வேலுக்குட்டி
கலை இயக்கம் – உமேஷ் ராஜ்குமார்
சண்டைப்பயிற்சி – கனல் கண்ணன், பீட்டர் ஹெயின் , ரவிவர்மா
உடைகள் – சத்யா NJ
நடனம் -தினேஷ் , அஸார்
பாடல்கள் – மதுர கவி, அஸல் கோலாறு
நிர்வாக தயாரிப்பு – சொக்கலிங்கம் ,
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்
புகைப்படம் – R S ராஜா
விளம்பர வடிவமைப்பு -கபிலன்