• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

போட்ட பட்ஜெட்டை டிஜிட்டலில் அள்ளிய ‘விக்ரம்’!

கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படம் வரும் ஜூன் மாதம் 3ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. வரும் மே 15-ஆம் தேதி படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகும் ஒடிடி உரிமத்தை டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஒடிடி தளம் கைப்பற்றியுள்ளது. படம் திரையரங்குகளில் வெளியான நான்கு வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். சாட்டிலைட் உரிமத்தை டிவி சேனல்களான ஸ்டார் விஜய் (தமிழ்), ஏசியாநெட் (மலையாளம்), ஸ்டார் நட்சத்திர சுவர்ணா (கன்னடம்), ஸ்டார் கோல்டு (இந்தி) ஸ்டார் மா (தெலுங்கு) பெற்றுள்ளன.

விக்ரம் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமம் 125 கோடி இந்திய ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளதாம். படத்தின் பட்ஜெட்டி 100 கோடி எனவும், படம் வெளியாவதற்கு முன்பே 125 கோடி வசூல் செய்துவிட்டது எனவும், அடுத்ததாக திரையரங்குகளில் வெளியான பிறகு அதிலும் வரும் வசூல் படக்குழுவுக்கு கூடுதல் லாபம் கொடுக்கும் எனவும் நெட்டிசன்கள் தெரிவிக்கின்றார்கள்.