• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

இந்திய அணியில் மீண்டும் தல தோனி….

By

Sep 9, 2021 , ,

டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் டி-20 உலகக்கோப்பை நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக பல அணிகள் தங்கள் வீரர்களை அறிவித்த நிலையில், இந்தியா அணி வீரர்கள் அறிவிக்காமல் இருந்தநிலையில் தற்போது இந்திய அணியின் வீரர்கள் அறிவிக்கப்பட்டனர்.
கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ராகுல் சஹர், அஷ்வின், அக்சர் படேல், வருண் சக்கிரவர்த்தி, பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்
ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர் ஆகியோர் காத்திருப்பு வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனி உலகக்கோப்பையில் விளையாட இருக்கும் இந்திய அணிக்கு ஆலோசகராக இருப்பார் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.