• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

மின்கம்பங்கள் சாய்ந்து மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் விவசாயிகள் அச்சம்..,

ByP.Thangapandi

Jul 8, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் கிராமத்தில் விவசாய நிலத்தில் மின்கம்பங்கள் சாய்ந்து மின் வயர்கள் தாழ்வாக செல்வதாலும் மேலும் மின்கம்பம் சிதலமடைந்து கம்பிகள் துருப்பிடித்து கீழே விழும் சூழல் இருப்பதாகவும் விவசாய நிலத்திற்கு சென்று வருவதற்கு விவசாயிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை இருப்பதாக விவசாயி கருப்பையா வேதனை தெரிவிக்கிறார்.,

மேலும் இதன் அருகிலேயே மற்ற விவசாய நிலங்களிலும் மின்வயர்கள் தாழ்வாக செல்வதால் விவசாய நிலத்தை உழுவதற்கு அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.,

இந்நிலையில் இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.,

விரைந்து நடவடிக்கை எடுத்து மின்கம்பங்களை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.,