வலிமை படத்தில் வழக்கறிஞர்களை தவறாக காட்டுகின்றனர் என கூறி வழக்கறிஞர் சங்கம் புகார் அளித்துள்ளனர்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியான திரைப்படம் வலிமை. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களை தவறான பாதைக்கு திசை திருப்பும் கும்பலிடம் இருந்து ஒரு போலீஸ் அதிகாரி எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை!
மேலும், படத்தில் வில்லன் குரூப்பில் சில வழக்கறிஞர்கள் இளைஞர்களை தவறான பாதைக்கு திருப்ப முயற்சிக்கும் படி காட்சிகள் இருக்கும். இதனால், வலிமை படத்தில் வழக்கறிஞர்களை தவறாக காட்டுகின்றனர் என கூறி வழக்கறிஞர் சங்கம் வலிமை படத்தின் மீது புகார் அளித்துள்ளனர்.
வலிமை திரைப்படம்மட்டுமின்றி இதற்கு முன்பு வெளியான பல திரைப்படங்களில் வழக்கறிஞர்களை தவறாகவும், வில்லன்களாகவும் காட்டப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.