• Sat. Apr 27th, 2024

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வசந்த உற்சவ திருவிழா

ByA.Tamilselvan

Jun 4, 2022

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவ விழா துவங்கி நடைபெற்று வருகிறது. அம்மனும் சுவாமியும் புதுமண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்
மதுரை மீனாட்சியம்மன் கோவில் வைகாசி வசந்த உற்சவ திருவிழா கிழக்கு ராஜ கோபுரம் எதிரே இருக்கக்கூடிய 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த புதுமண்டபத்தில் பாரம்பரிய முறைப்படி புதுமண்டபத்தை மூன்று முறை மீனாட்சி அம்மனும், சுவாமியும் பிரியாவிடை அம்மனுடன் எழுந்தருளி வலம் வந்து அதன் பின் மைய மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் மீனாட்சியம்மன், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதனை தொடர்ந்து விசேஷ ஆராதனைகளும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரர் சித்திரை வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த பிறகு மீண்டும் கோவிலுக்கு சென்றனர். மேலும் ஆண்டுதோறும் எளிமையான முறையில் நடைபெற்று வந்த வைகாசி வசந்த விழா இந்தாண்டு புதுமண்டபத்தில் இருந்த கடைகள் அகற்றப்பட்டு கோலாகலமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *