மதுரையில் கியான் வாபி மசூதிக்கு சீல் வைக்க உத்தரவிட்ட வாரணாசி நீதிமன்றம் உத்தரவைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை நெல்பேட்டை அண்ணாசிலை அருகில் எஸ்டிபிஐ கட்சியின் மதுரை தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்கள் சார்பில் தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில்
இந்திய அரசியல் சாசனம் & வழிப்பாட்டு தலங்கள் சட்டம் 1991 போன்ற சட்டங்களுக்கு விரோதமாக கியான் வாபி மசூதிக்கு சீல் வைக்க உத்தரவிட்ட வாரணாசி நீதிமன்றம் உத்தரவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ,கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ,நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்தும் இந்திய வழிபாட்டு சட்டம் 1991 நடைமுறைப்படுத்தக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது