மதுரையில் மேயர் தலைமையில் குறைதீர் சிறப்பு முகாம் – ஏராளமான பொதுமக்கள் மனுக்களுடன் குவிந்தனர்
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி 3வது மண்டலத்தின் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் மனு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் பாதாளசாக்கடை, சாலை வசதி, குடிநீர் தொடர்பான மனுக்களை வழங்கிவருகின்றனர். பொதுமக்களோடு சேர்ந்த கவுன்சிலர்களும் வருகை தந்து பணியாளர்கள் அதிகரிப்பு வார்டு தேவைகள் தொடர்பாகவும் மனுக்களை அளித்து வருகின்றனர். தொடர்ந்து மதுரை மாநகராட்சிக்கு மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறைபாடு குறித்து ஏராளமான பொதுமக்கள் மக்களாக மதுரை மேயர் மற்றும் துணை மேயரிடம் அளித்தனர்.
குறைதீர் சிறப்பு முகாம் மனுக்களுடன் குவிந்த பொதுமக்கள்
