

தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கம் சார்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சுப் பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தி உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர்
மதுரை பழங்காநத்தம் பகுதியில் தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சு பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட அமைசச்சுப் பணியாளர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறைகளில் நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மை போன்ற பணிகள் செய்வதற்கு அமைச்சு பணியாளர்கள் போதிய அளவில் இல்லை. மேலும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் வேளாண்துறை சார்பில் அலுவலகம் திறக்கப்பட்டுள்ள ன. இந்நிலையில் புதிய அமைச்சு பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை . மத்திய மாநில அரசு வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை விவசாயிகளுக்காக அறிவித்து வருகிறது .இதனை நிறைவேற்றும் வகையில் நிதி மேலாண்மை மற்றும் நிர்வாக பணிகள் செய்வதற்கு அமைச்சுப் பணியாளர்கள் தேவை. ஆனால் இதுதொடர்பாக வேளாண்மை துறையில் அனுமதித்த திட்டங்கள் நிதித்துறைக்குச் செல்லும்போது ஏதாவது ஒரு காரணம் காட்டி திருப்பி அனுப்பப்படுகிறது. எனவே நிதி அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுவதாக ஆர்பாட்டாத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்
