• Tue. Dec 10th, 2024

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம்…..

குருவி பனை ஏறி நிலத்தடி நீரை மாசுபடுத்தும் ஏ எல் சி சாயப்பட்டறை மூட வலியுறுத்தியும் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் அம்பேத்கரைத் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…

சேலம் எருமை பாளையத்தில் உள்ள குருவி பனை ஏறி நிலத்தடி நீரை மாசுபடுத்தும் என்எல்சி சாயப்பட்டறை மூடக்கோரி சேலம் மாநகராட்சி 44வது டிவிஷன் புதிய சுண்ணாம்பு சூளை பகுதியில் வசிக்கக் கூடிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பட்டா மற்றும் அடிப்படை வசதிகளை செய்துதர கோரியும் காரிப்பட்டி கிராமத்தில் வீடு இல்லாத 60 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அம்பேத்கரைப் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் கண்டன கோஷங்களை எழுப்பினர் அம்பேத்கரைத் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநில தலைவர் வாத்தியார் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.