சேலத்தில் வரதட்சணையாக கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட மனைவியின் வாயில் சாணி பவுடரை ஊற்றிய கணவர்……
சேலம் அரசு மருத்துவமனையில் மனைவி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…….
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார்(39), இவரது மனைவி யசோதா இருவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் சந்தோஷ்குமார் புதிய தொழில் துவங்குவதற்கு பணம் தேவைப்படுவதாக கூறி,யசோதா குடும்பத்தாரிடம் 5 லட்சம் வரை வரதட்சணையாக பணத்தைப் பெற்றுகொண்டதாக கூறப்படுகிறது.இதனிடையில் திருமணமாகி ஐந்து மாதங்களில் யசோதாவை பிடிக்கவில்லை என்று சொல்லி அடித்து விரட்டி உள்ளார். கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக இதுதொடர்பாக காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்த நிலையில் கணவர் சந்தோஷ்குமார் மனைவியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கூறி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்
இந்த நிலையில் கணவருக்கு வழங்கிய 5 லட்சம் பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்று கூறி,இன்று கணவர் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதில் யசோதா கையை பிடித்து வாயில் சாணி பவுடரை வாயில் ஊற்றிதாக கொல்ல முயற்சித்ததாக கூறி,மயங்கிய நிலையில் யசோதா சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் கணவருக்கு வரதட்சணையாக வழங்கிய 5 லட்சம் ரூபாய் பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் மிகுந்த சிரமத்தை உள்ளதால் பணத்தை திரும்ப பெற்றுத் தருமாறு யாசோதா கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக காவல்துறையினர் கணவர் மற்றும் மாமியாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்