• Thu. Apr 25th, 2024

நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழகத்தில் திமுக அரசு பாரபட்சமாக நடந்து கொள்ளுவதாக கோரி ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் அரசு போக்குவரத்து கழகங்களில் திமுகவினருக்கு மட்டுமே ஓட்டுனர் நடத்துனர் பணிகள் அதிகமாக வழங்கும் பாரபட்சமான நிர்வாகம் நடப்பதாக கோரி நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழகம் முன்பு பாரதிய மஸ்தூர் சங்கத்தின் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக ஆட்சிக்கு வந்த பின்பு நிறைவேற்றாமல் தொழிலாளர்களை பழிவாங்குவது நடவடிக்கைகளை மட்டுமே செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு பாரதிய மஸ்தூர் சங்கம் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் மூலம் பல்வேறு கோரிக்கைகளும் கண்டனங்களும் தமிழக அரசுக்கு முன் வைக்கப்பட்டது.

நாகர்கோவில் மண்டலத்தில் செய்யாத குற்றத்திற்காக எந்தவிதமான விசாரணையும் நிர்வாகம் தரப்பில் எடுக்காமல் தொழிலாளர்கள் தண்டிக்கப்பட்டு வருவதாகும், நாகர்கோவிலில் பணியாற்றி வந்த 200க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் பணியாளர்கள் நடத்துனர்கள் திடீரென நெல்லை மற்றும் தூத்துக்குடி மண்டலத்திற்கும் பணியிட மாற்றம் செய்துவிட்டு சென்னையிலிருந்து திமுகவினரை குமரி மாவட்டத்தில் உள்ள போக்குவரத்துக்கு கழகங்களில் பணியிடங்களுக்கு கொண்டுவர திமுக அரசு முயற்சி செய்து வருகிறார்கள். அதே போன்று ஓட்டுனர் நடத்துனர்கள் பணிகளை திமுகவினருக்கு வழங்கி வருவதாகவும் பணி வழங்கும் கட்டுப்பாட்டு பிரிவில் திமுகவினர் சேர்ந்தவர்களே பணியமர்த்தி, ஓட்டுனர் நடத்துனர்கள் பணியும் அவர்களுக்கு கொடுப்பதற்காக ஆட்களை நியமனம் செய்துள்ளதாக கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இது ஒரு பாரபட்சமான அரசின் நடவடிக்கை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்தலின்போது கொடுக்கப்பட்ட தொளிலாளர்களுக்னாக எந்த வாக்குறுதிகள் ஆட்சிக்கு வந்த பின்பு திமுக அரசு நிறைவேற்றவில்லை. அதற்குப்பதிலாக தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தொழிலாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *