• Sat. Apr 20th, 2024

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு 108 போர்வை சாற்றுதல்

Byகிஷோர்

Dec 15, 2021

ஸ்ரீ வில்லிபுத்தூர் 108 வைணவ திருத்தலங்களில் சிறப்பு பெற்றதாகும். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி அன்று நம்பாடுவான் என்ற பக்தனுக்கு பெருமாள் அருள் செய்ததை முன்னிட்டும், குளிர் காலம் வருவதால் அதனை பக்தர்களுக்கு அறிவிக்கும் வண்ணமும், இங்கு கோவில் கொண்டு அருள் பாலிக்கும் சுவாமிகளுக்கு 108 போர்வைகள் சாற்றப்படும் வைபவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதுபோல் இந்த ஆண்டு இவ்வைபவம் இன்று 15.12.2021 அதிகாலை சிறப்பாக நடைபெற்றது. இந்த வைபவத்தின் போது இன்று ஒரு நாள் மட்டுமே கருடாழ்வார் சன்னதியிலிருந்து புறப்பட்டு பகல் பத்து மண்டபம் எழுந்தருளுவார். அங்கு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், ஸ்ரீ தேவி, பூமிதேவி, ஆழ்வார்கள், ஆச்சாரியர்களுக்கு 108 போர்வை சாற்றும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அதிகாலையில் புராணம் வாசிக்கப்பட்டது. அதிகாலை வேளையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *