திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நெற்கழஞ்சியமாக திகழ்ந்தது குமரி மாவட்டம். இதன் காரணமாக குமரி மாவட்டத்திற்கு நாஞ்சில் நாடு என்ற சிறப்பை பெற்ற மாவட்டம். இன்றும் அதன் பழம் பெருமை தொடர்கிறது.
நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் நாஞ்சில் அரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
தோவாளை சானலில் 6500 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில். பொதுப்பணித்துறை, வேளாண்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாவட்டம் விவசாயிகள் சங்கத்தலைவர் வின்ஸ் ஆன்றோ தலைமையில் மாவட்ட விவசாயிகள் கலந்துக்கொண்டார்கள். இந்த கூட்டத்தில் பங்கேற்ற தோவாளை பகுதியை சேர்ந்த விவசாயிகள் நெற்பயிர்களை கையில் கொண்டு வந்திருந்தனர்..
தோவாளை சானலில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்கள் கடந்து விட்டது இதுவரை சீர் செய்யாது காலம் கடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் சானல்கள் சீரமைப்புக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
தோவாளை சானல் சீரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்த பிறகும் உடைப்பை சரி செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காது பல மாதங்களாக காலம் கடத்தி வந்த நிலையில், விவசாயிகள் கூட்ட அரங்கில் இருந்து வெளியே வந்து. ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் மாவட்ட நீர்ப்பாசன சங்கத்தின் தலைவர் வின்ஸ் ஆன்றோ, புலவர் செல்லப்பா,தாணு பிள்ளை,அருள், விஜயன் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஆட்சியர் வளாகத்தில் தேங்கி கிடந்த மழை நீரில் விவசாயிகள் நாத்து நடும் போராட்டத்தையும் நடத்தினர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் உறுதி மொழிக்கு பின் விவசாயிகள் தர்ணா போராட்டத்தை கை விட்டு கலைத்து சென்றனர்.