• Mon. May 25th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

நிலம் அற்றோருக்கு நிலம் கொடுக்க மாத்தூர் மக்கள் கோரிக்கை

அந்தியூர் ஈஸ்வரன் கலந்து கொண்ட மாத்தூர் நில குடியேற்ற பயனாளிகள் நல சங்கத்தின் சிறப்பு ஆலோசனை கூட்டம்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் மாத்தூர் கிராமத்தில் நில குடியேற்ற பயனாளிகள் நலச் சங்கத்தின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் அந்தியூர் ஈஸ்வரன் கலந்து கொண்டார். அவரிடம் நிர்வாகிகள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் நிலக் குடியேற்ற சங்கத்தின் மூலமாக நிலம் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு நிலம் கொடுக்க வேண்டி தமிழக அரசிடம் பத்து ஆண்டுகளாக பல்வேறு அதிகாரியிடமும், அரசியல்வாதிகளிடமும் மனு அளித்தும் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தும் எந்த பலனும் அளிக்கவில்லை, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக முதல்வரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, வேறு வழி தெரியாமல் தவித்த போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளரை அணுகி எங்களிடம் இருக்கும் ஆவணங்களை கொடுத்து அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் ஒரு மனதாக தீர்மானித்து இந்த பணியை உங்களிடம் ஒப்படைக்கிறோம். மேலும் இச்சங்கத்தை சார்ந்த பணியை செய்வதற்கும் முழு அதிகாரம் வழங்குகிறோம். எங்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என கோரிக்கை மனுவில் குறிப்பிட்டு மனுவை மாநில துணைச் செயலாளர் அந்தியூர் ஈஸ்வரனிடம் அளித்தனர்.