அதிமுகவுக்கும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆகியோருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக யுடியூப் சானலில் பேட்டி அளித்த ஆத்தூர், கல்லாநத்தம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் கே.வி.ஆர்.கர்ணன், செய்தியாளர் குருபிரசாத், யுடியூப் சானல் உரிமையாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் சரக காவல்துறை துணைத்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சிவராஜன் புகார் அளித்தார்.
இது ஆதாரமற்ற குற்றசாட்டுகளை அதிமுக மீதும், எடப்பாடி பழனிச்சாமி மீதும் கூறியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகார் அளிக்கும்போது சட்டமன்ற உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன், ராஜமுத்து, மணி, ஜெய்சங்கரன், நல்லதம்பி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.