• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

புக்கிங் அளவில் குறைந்துவரும் எதற்கும் துணிந்தவன்..

சூர்யா நடிப்பில் உருவாகி நாளை வெளியாக உள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.

சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் படப்ப்பிடிப்பு முடிந்து பிப்ரவரி 4 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் மார்ச் 10ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்தது.

ஜெய்பீம் படத்தின் வெற்றிக்குப் பிறகு வெளியாக உள்ள இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்போது டிக்கெட் புக்கிங் மூன்று நாட்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட நிலையில் இன்னும் பெருவாரியான திரையரங்குகளில் டிக்கெட் புக் ஆகாமல் உள்ளதாம்.

ஒருவேளை நாளை வியாழக்கிழமை வேலை நாள் என்பதால் ரசிகர்கள் பெரிய ஆர்வம் காட்டவில்லையோ அல்லது அரசியல் பிரச்சினையாக இருக்குமோ என்று பேச்சுகள் அடிபட்டு வருகிறது.