• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

டி. எஸ். துரைராஜ் பிறந்த தினம் இன்று..!

Byகாயத்ரி

Dec 31, 2021

1940-1960 காலகட்டத்தில் நடித்த ஒரு மேடைநாடக, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் டி. எஸ். துரைராஜ். தமிழ்த் திரைப்படங்களில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் நகைச்சுவைக் கூட்டாளியாக பல படங்களில் நடித்தார். டி. எஸ். துரைராஜ் தஞ்சாவூரில் ராஜா நாயுடு, நாகலட்சுமி ஆகியோருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் தந்தை உள்ளூரில் ஒரு எழுத்தராகப் பணியாற்றியவர். மதுரையில் அப்போது சங்கரதாசு சுவாமிகள் தனது நாடகக் கம்பனியை ஆரம்பித்து நடத்தி வந்தார்.

பள்ளிப் படிப்பில் நாட்டமில்லாமல் இருந்த துரைராஜ் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் கம்பனியில் சேர்ந்தார். இவருக்கு நிறையப் பாடும் சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட்டன. கோமாளி, மற்றும் பெண்கள் வேடங்களிலும் நடித்து வந்தார். இவர் பிற்காலத்தில் சொந்தமாகப் பட நிறுவனம் தொடங்கி சில படங்களைத் தயாரித்து இயக்கினார். அதில் குறிப்பிடத்தக்க திரைப்படம் 1958 இல் வெளிவந்த பானை பிடித்தவள் பாக்கியசாலி. இதில் சாவித்திரியின் அண்ணனாக நடித்தார்.

இப்படத்தில் இவர் மணமாகப்போகும் தன் தங்கை சாவித்திரிக்கு அறிவுரை கூறுவதுபோல் பாடுவது போல் அமைந்த புருசன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே தங்கச்சிக் கண்ணே சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே என்ற பாடல் இன்றும் புகழ் பெற்றதாக உள்ளது.இன்றும் பலராலும் பேசப்படும் ஒரு கலைஞன் டி. எஸ். துரைராஜ் பிறந்த தினம் இன்று..!