பதினேழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி இராணி வேலுநாச்சியார். இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை இவர். 1730-ஆம் ஆண்டில் , இராமநாதபுரம் சமஸ்தானம் மன்னர் செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி – சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே மகளாகப் பிறந்தார் வேலுநாச்சியார். ஒரு ஆண் வாரிசை எப்படி வளர்ப்பார்களோ அப்படி வளர்க்கப்பட்டார்.
1746-இல் சிவகங்கைச் சீமை மன்னர் முத்துவடுகநாதத்தேவருக்கு மனைவியானார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர் அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார். வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார்.வீரத்திற்கு பெயர் போன வேலு நாச்சியார் பிறந்த தினம் இன்று…!