• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அண்ணன், தங்கைக்கு எம்எல்ஏ வெங்கடேசன் ஆறுதல்…

Byசோலைஆதி

Mar 10, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தாய், தந்தையை இழந்து தவிக்கும் அண்ணன், தங்கைக்கு வெங்கடேசன் எம் எல் ஏ ஆறுதல் கூறி, கல்லூரி படிப்புக்கு உதவி செய்வதாக உறுதியளித்தார்.

சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தைச்சேர்ந்த ஜெயபாண்டி வயது 40. இவர் நேற்றைய முன் தினம் காலை மோட்டர் சுவிட்ச் போடும்போது, மின்சார தாக்கி சம்பவ இடத்திலே பலியானார். இவரது மனைவி ஐந்து ஆண்டுக்கு முன்னால் இறந்துவிட்டார். மகனையும், மகளையும் வளர்த்துப் படிக்க வைத்துக் கொண்டிருந்தார். தாயும், தந்தையும் இழந்து தவிக்கும் இருவருக்கு வெங்கடேசன் எம்எல்ஏ ஆறுதல் கூறி, நிதி வழங்கினார். மேற்கொண்டும் இருவரும் கல்லூரி படிப்பதற்கு உதவி செய்வதாக உறுதியளித்தார். இதில் மாவட்ட விவசாய அணி வக்கீல் முருகன், ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளர் வெற்றிச்செல்வன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி, கிளைச் செயலாளர்கள் திருமுருகன், வரதன் உள்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.