

மோடி தலைமையிலான மத்திய அரசு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான வரியை விட, பொதுமக்கள் மீது அதிக வரியை விதிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில், கார்ப்ரேட் நிறுவனங்களிடம் இருந்து பெறுவதை விட மக்களிடம் இருந்து மத்திய அரசு அதிக வரி வருவாய் பெறுவதை விளக்கும் பட்டியலை ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். அதில் கடந்த 2010 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், கார்ப்ரேட் நிறுவனங்கள் மூலம் கிடைத்த வரி வருவாய் 40 சதவீதமாக உள்ளதாகவும் அதுவே பொதுமக்களிடமிருந்து பெற்ற வரி வருவாய் 24 சதவீதமாக உள்ளது என்றும் அவர் விளக்கியுள்ளார் .கடந்த 2021 ஆண்டு கார்ப்ரேட் நிறுவனங்களிடம் இருந்து தற்போதைய மத்திய அரசு பெற்ற வரி வருவாய் 24 சதவீதமாக குறைந்திருப்பதும், அதே நேரத்தில் பொதுமக்களிடமிருந்து வசூலித்த வரி வருவாய் 48 சதவீதமாக அதிகரித்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
