பாஜக மாவட்டத் தலைவர் சரவணனிடம் மனு வாங்க மதுரை மேயர் மறுப்பு, மாநகராட்சி நினைவு தூணில் மனுவை அளிக்கப்பட்டது.
பாஜக மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் மதுரை மாநகராட்சி வளாகத்தில் மதுரையின் முதல் மேயாராக பணியாற்றிய முத்துவுக்கு சிலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மதுரை மேயர் இந்திராணியிடம் மனு அளிக்க மாநகராட்சி அலுவலகம் வந்தார்.ஆனால் 1 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த டாக்டர் சரவணனை மேயர் சந்திக்க மறுத்ததால் டாக்டர் சரவணன் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட பாஜகவினர் மதுரைமாநகராட்சி நினைவு தூணுக்கு சால்வை அணிவித்து, புத்தகம் வழங்கி மனுவை வழங்கும் நூதன போராட்டத்தை நடத்தினர்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் சரவணன் கூறுகையில்
“மக்களுக்காக உழைத்த மதுரை மேயருக்கு சிலை வைக்க கோரி மனு அளிக்க நேற்றே மேயரின் உதவியாளரிடம் நேரம் ஒதுக்கீடு செய்து தரும்படி கேட்டதன் பேரில் பிற்பகல் 12 மணிக்கு நேரம் ஒதுக்கீடு செய்தார்கள். ஆனால் 1 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தும் மேயர் எங்களை சந்திக்க மறுப்பு தெரிவித்து விட்டார், .தேசிய கட்சியின் பிரதிநிதியை கூட இம்மேயர் சந்திக்க மறுத்து உள்ளார். பதவியேற்ற நாளில் இருந்து மக்களை மேயர் சந்திப்பதில்லை, மேயர் மனுவை வாங்க மறுத்ததால் கல்லாக உள்ள மாநகராட்சி நினைவு தூணிடம் மனுவை அளித்தோம். மேயரின் மக்கள் விரோத போக்கு குறித்து தமிழக முதல்வர் விசாரித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என கூறினார்