அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தனிமை படுத்திக்கொண்டதாக டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று அமெரிக்காவில் அதிகரித்துவரும் நிலையில் .அங்கு தடுப்பூசிபோடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் இது வரை 3 தடுப்பூசி செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதது.
அவருக்கு கொரோனா ஏ சிம்டமெடிக் எனப்படும் அறிகுறியில்லா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், ஆபத்து இல்லை எனவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள தகவலின்படி , “துணை அதிபர் கமலா ஹாரீஸ் பிசிஆர் சோதனையின் போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லை. தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு துணை அதிபர் மாளிகையிலிருந்து தொடர்ந்து பணி செய்வார் எனவும், தற்போது அவர் நலமாக உள்ள நிலையில் கொரோனா வழிகாட்டுதல்கள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைக்கு பின்பு சோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்த பின்னர் வெள்ளை மாளிகைக்கு திரும்புவார்” என கூறப்பட்டுள்ளது.