• Tue. May 5th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

திருச்செங்கோட்டில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம்!…

By

Aug 22, 2021

திருச்செங்கோட்டில் ரோட்டரி சங்கமும் இந்திய மருத்துவச் சங்கமும் இணைந்து பொதுமக்களுக்கு கொரானா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ரோட்டரி சங்கமும் இந்திய மருத்துவச் சங்கமும் இணைந்து பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டத்தை நடத்தினர். திருச்செங்கோடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் தனசேகரன், இந்திய மருத்துவ சங்கத்தின் திருச்செங்கோடு கிளை செயலாளர் மகுடேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கொரோனா சிகிச்சை மருத்துவர் சத்தியபானு பொதுமக்களின் கேள்விகளுக்கு விடையளித்தார். தடுப்பூசிகள் போடப்படுவது குறித்தும், நோய் தொற்றை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் படக்காட்சிகள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் கொரான காலகட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.