• Wed. May 27th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்

Byவிஷா

Aug 19, 2022

தக்காளி பூரி:

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 2 கப், தக்காளி – 3, காய்ந்த மிளகாய் – 2, உப்பு – சுவைக்கேற்ப நெய் அல்லது எண்ணெய் – ஒரு டீஸ்பூன் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து, தோலை உரித்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மிளகாயை வெந்நீரில் சில நிமிடங்கள் ஊறவைத்து, விழுதாக அரைத்துக்கொள்ளவும். கோதுமை மாவுடன் தக்காளி விழுது, மிளகாய் விழுது, நெய் அல்லது எண்ணெய், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். சிறு சிறு பூரிகளாக தேய்த்து, காயும் எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். சூப்பரான தக்காளி பூரி தயார்.