• Sat. May 4th, 2024

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Jul 1, 2023

கோதுமை மாவு முறுக்கு செய்முறை:

முதலில் 2 கப் அளவு கோதுமை மாவு எடுத்துக் கொள்ளுங்கள். இதை இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைக்க வேண்டும். அடுப்பில் ஒரு இட்லி பாத்திரத்தை வைத்து, தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். இட்லி குண்டானில், இட்லி தட்டை வைத்து அதன் மேல் ஈரம் இல்லாத வெள்ளை காட்டன் துணியை போட்டு, அதன் மேலே 2 கப் அளவு கோதுமை மாவை பரப்பி போட்டு விட்டு, அந்த துணியாலயே கோதுமை மாவை மூடி, இட்லிகுண்டானுக்கு மேல் தட்டை மூடி, பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.

கோதுமை மாவுக்கு மேலே துணி போர்த்தப்பட்டு இருக்க வேண்டும். இல்லையென்றால் இட்லி குண்டானுக்கு மேலே மூடப்பட்டிருக்கும் தட்டில் இருந்து ஆவி மாவில் விழுந்து, மாவு ஈரமாகிவிடும்  என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

ஆவியில் கோதுமை மாவு வெந்த பிறகு அதை எடுத்து அகலமான ஒரு பவுலில் போட்டு நன்றாக ஆரவைத்து, உங்கள் கையை கொண்டு பிசைந்து கொள்ளுங்கள். மாவு ரொம்பவும் கட்டி கட்டியாக இருக்கிறது என்றால், இதை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி கூட பாத்திரத்தில் கொட்டிக் கொள்ளலாம். இப்போது அகலமான பாத்திரத்தில் ஆவியில் வேக வைத்த கோதுமை மாவு – 2 கப், பொட்டுக்கடலை மாவு – 1/4 கப், உப்பு – தேவையான அளவு, சீரகம் –  1/4 ஸ்பூன், காய்ச்சிய எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், ஊற்றி உங்கள் கையை கொண்டு நன்றாக பிசைந்து விடுங்கள்.

கொதிக்க கொதிக்க சூடான எண்ணெயை ஊற்றிய பின்பு ஜாக்கிரதையாக மாவை பிசையுங்கள். இல்லையென்றால் ஒரு ஸ்பூனை வைத்து கலந்து விடுங்கள். எண்ணெயின் சூடு ஆறி வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை தெளித்து இந்த மாவை முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பிறகு வழக்கம் போல முறுக்கு அச்சில் தேன்குழல் முறுக்கு, அல்லது ஸ்டார் முறுக்கு அச்சில் தேவையான அளவு மாவை போட்டு முறுக்கு பிழிந்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டியது தான்.

Related Post

delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
கோதுமை மாவு இட்லி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *