• Thu. Sep 28th, 2023

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Jun 26, 2023

இடியாப்பம் செய்ய தேவையான பொருட்கள்:

மீதமான சாதம் – ஒரு கப், அரிசி மாவு – ஒரு கப், உப்பு – தேவையான அளவு.

இடியாப்பம் செய்முறை விளக்கம்:

இடியாப்பம் செய்வதற்கு முதலில் மீதமான சாதம் ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த இடியாப்பம் செய்வதற்கு பச்சரிசியில் வடித்த சாதம் தான் தேவை என்பது இல்லை. புழுங்கல் அரிசியாக இருந்தாலும் செய்யலாம். இதற்கு பயன்படுத்தப்படும் மாவும் அப்படித்தான். ஒரு கப் சாதத்தை மீடியம் சைஸ் மிக்ஸர் ஜாரில் போட்டு ஒருமுறை நன்கு சுற்றி அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அரைத்து எடுத்த இந்த மாவு சரியாக அரைப்படவில்லை என்றால் மட்டுமே ஒரு ஸ்பூன் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அரைக்கவும். மற்றபடி முடிந்த அளவிற்கு தண்ணீர் கொஞ்சமும்  சேர்க்காமல் அரைத்து எடுத்தால் தான் மாவு கெட்டியாக நமக்கு கிடைக்கும். ஒருமுறை அரைத்து எடுத்த பின்பு ஸ்பூன் வைத்து நன்கு எல்லா இடங்களிலும் கலந்து விட்டு மீண்டும் ஒருமுறை அரைக்கவும், அப்பொழுது தான் கட்டிகள் இல்லாமல் நைசாக அரைபடும்.

இப்பொழுது இந்த மாவை ஒரு பவுலுக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். வடித்த சாதத்தில் நீங்கள் உப்பு போட்டு இருந்தால் அதற்கு ஏற்ப உப்பை பார்த்து சேர்த்துக் கொள்வது நல்லது. பின் உங்களிடம் இருக்கும் பச்சரிசி மாவு அல்லது புழுங்கல் அரிசி மாவு எதுவாகினும் தேவையான அளவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.

மாவை எவ்வளவு கெட்டியாக கைகளில் ஒட்டாமல் பிசைய முடியுமா அவ்வளவு கெட்டியாக பிசைந்து கொள்ளுங்கள். கடைசியில் கொஞ்சம் கையில் எண்ணெய் தடவி பிசையுங்கள் ஒட்டாமல் வரும். பின்னர் மாவை இடியாப்ப குழலில் இடுவதற்கு ஏற்ப சிறு சிறு பிரிவுகளாக பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். மீதம் இருக்கும் மாவை மூடி போட்டு மூடி வைத்துக் கொள்ளுங்கள், காற்றில் காயாமல் இருக்கும். பின்னர் கொஞ்ச மாவை இடியாப்ப குழலில் இட்டு நீங்கள் வழக்கம் போல இடியாப்பம் பிழிவது போல பிழிந்து கொள்ள வேண்டும். பின்னர் இட்லி பானையில் வைத்து பத்து நிமிடம் அவித்து எடுத்தால் பூ போல பஞ்சு மாதிரி மிருதுவான சுவையான இடியாப்பம் தயார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *