விஜய் மல்லையாவுக்கான தண்டனை விபரம், வரும் ஜன., 18 ல் அறிவிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, 9,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்றார். லண்டனில் உள்ள அவரை, இந்தியாவுக்கு கொண்டுவர பலவேறு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
விஜய் மல்லையாவுக்கு எதிராக வங்கிகள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என தீர்ப்பளிக்கப் பட்டது. வழக்கில் மல்லையா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அவருக்கான தண்டனை மீதான விசாரணை மட்டும் இன்னும் முடியவில்லை.
நீதிமன்றத்தில் மல்லையா ஆஜராக போதிய அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது. இனியும் காத்திருக்க முடியாது. அதனால் மல்லையாவுக்கு வழங்கப்படும் தண்டனை மீதான விசாரணை, வரும் ஜன., இரண்டாவது வாரத்தில் நடத்தப்பட்டு,18 ல் தீர்ப்பு வெளியாக உள்ளது.
- கோவை ஆல் டான்ஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் தொடக்க விழா..,

- வாடிப்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் தெருமுனை விளக்க கூட்டம்..,

- பழனி நில மோசடி வழக்கில் கைது செய்துபட்டவர் மதுரை மத்திய சிறையில் உயிரிழப்பு…

- அரிசியின் விலை 25 சதவீதம் உயர்ந்துவிட்டது-ஆர் பி உதயகுமார்..,

- சோழவந்தான் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 20 க்கும் மேற்பட்டோர் அனுமதி..,

- கலைஞர் கருணாநிதி நினைவஞ்சலி முன்னாள் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் மௌன அஞ்சலி..,

- தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் 10 வது உட்கோட்ட பேரவை கூட்டம்..,

- இளைஞர் கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகை போராட்டம்..,

- பட்டாசு கூலி தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,

- கோவையில் “ஃபேர்ப்ரோ 2026” வீட்டுமனை கண்காட்சி தொடக்கம்..,






