

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் நிதி முடக்கம், பேரிடர் நிதி முடக்கம், கல்வி நிதி மறுப்பு ,நீட் தேர்வு, வக்பு சட்ட திருத்தம் போன்ற செயல்பாடுகளை கண்டித்து தமிழகம் வருகை தந்த பிரதமர் மோடியை கண்டித்து திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பல்லடத்தில் கொசவம்பாளையம் சாலையில் கருப்பு கொடி மற்றும் கருப்பு பலூன் பறக்கவிடும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபிநாத் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்.

தொடர்ச்சியாக தமிழகத்தை பாஜக அரசு வஞ்சித்து வருவதாகவும், வக்பு சட்டத்திருத்தத்தால் ஏராளமான இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்லடம் நகரத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்லடம் வட்டாரத் தலைவர் புண்ணியமூர்த்தி, மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் மணிராஜ், மற்றும் ஏராளமான காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு கருப்புக் கொடி ஏந்தியும் கருப்பு பலன்களை பறக்கவிட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

