

சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப அவ்வப்போது மாறிவரும் சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்த நிலையில் வணிகபயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.96குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி பொதுவாக எண்ணெய் நிறுவனங்களால் சமையல் கியாஸ் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இன்று வணிக பயன்பாட்டிற்காக கியாஸ் சிலிண்டர் விலை மட்டும் குறைக்கப்பட்டுள்ளது. 19 கிலோ எடையுள்ள வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.96 அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ரூ.2,141-க்கு விற்கப்பட்ட வணிக சிலிண்டர் தற்போது ரூ.2045 ஆக குறைந்துள்ளது.
