• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பெண்களுக்கு குட் நியூஸ்.. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இன்று அறிமுகம்..!

ByA.Tamilselvan

Sep 1, 2022

பெண்களுக்கு வரும் கர்ப்பப்பை புற்று நோய்க்கான தடுப்பூசி இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த தடுப்பூசி இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
புற்றுநோய்களை பொறுத்தவரை, நோயால் பாதிக்கப்பட்ட பின்பே அதற்கான மருந்துகளும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.ஆனால், கர்ப்பப்பை வாய் புற்று நோயைப் பொறுத்தவரை, இந்தப் புற்றுநோய் வராமல் தடுக்க முன்கூட்டியே தடுப்பூசி வழங்கப்படுகிறது. வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இப்போது, கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கான தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் அனுமதி வழங்கியது.அதைத் தொடர்ந்து தடுப்பூசிக்கான சோதனைகள் 2018-ம் ஆண்டு செப்டம்பரில் இந்தியாவின் 12 இடங்களில் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புற்றுநோய் தடுப்பூசி அறிமுகம் செய்யப்படுவது பெருமைக்குரியது என்று டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்திருக்கிறார்.மத்திய உயிரி தொழில்நுட்பத் துறையும், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனமும் இணைந்து தடுப்பூசியை இன்று அறிமுகம் செய்கிறது.