
இந்தியாவில் எந்தப் பகுதியிலும் ஊழல் இருந்தால் அதை எதிர்க்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி என புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பாரத பிரதமரின் மனதின் குரல் நிகழ்வு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வுகள் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே பாரதிய ஜனதா கட்சியினரால் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராமச்சந்திரன் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும், கட்சியில் இணைந்த புதிய பொறுப்பாளர்களுக்கு சால்வை அணிவித்தும் உறுப்பினர் அட்டையையும் வணங்கினார். புதுக்கோட்டை மாநகர தலைவர் சீனிவாசன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து மட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் அகில இந்தியாவில் இளைஞர் மற்றும் இளம் பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருவதாகவும், இந்தியாவில் எந்த மூலையில் ஊழல் மற்றும் ஊழல் நடந்தால் அதை தட்டிக் கேட்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி எனவும், தமிழகத்தைப் பொருத்தமட்டில் திராவிட முன்னேற்ற கழகம் செய்யும் அனைத்து ஊழல்களையும் எதிர்த்து போராடும் கட்சி பாரதிய ஜனதா கட்சி என தெரிவித்தார். மேலும் இந்தியா முழுவதும் ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க பாரதிய ஜனதா கட்சி பாடுபட்டு வருவதாகவும், ஊழல் எங்கு நடந்தாலும் அதை தட்டிக் கேட்கும் ஒரே கட்சியாக பாரதிய ஜனதா கட்சி விளங்குவதாக தெரிவித்தார்.
