• Sat. Apr 20th, 2024

மானாமதுரை சிப்காட் வளாகத்தில் நவீன அரிசி ஆலையில் ஆட்சியர் ஆய்வு

ByKalamegam Viswanathan

Feb 22, 2023

சிவகங்கை மாவட்டம்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், மானாமதுரை சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் நவீன அரிசி ஆலையினை, மாவட்ட ஆட்சித்தலைவர்ப.மதுசூதன் ரெட்டி, நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில், செயல்பட்டு வரும் நவீன அரிசி ஆலையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:
தமிழ்நாடு முதலமைச்சர், ஆணைக்கிணங்க, சிவகங்கை மாவட்டத்தில், கொள்முதல் செய்யப்படும் நெல்லினை மழையிலிருந்து நனையாமல் பாதுகாக்கும் வகையில் 60.600 மெ.டன் கொள்ளளவு கொண்ட மேற்கூறை அமைப்பிலான நெல் சேமிப்பு மேடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பணி முடிக்கப்பட்ட 31,600 மெ.டன் கொள்ளைவு கொண்ட நெல் சேமிப்பு மேடைகள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 11.02.2023 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், 14,573 மெ.டன் நகர்வு செய்யப்பட்ட நெல்லில் 2,000 மெ.டன் மானாமதுரை சிப்காட் நவீன அரிசி ஆலை வளாகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட 10,000 மெ.டன் கொன்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்பிலான சேமிப்பு மேடையில் சேமிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 12,573 மெ.டன் நெல் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மற்றும் மானாமதுரை நவீன அரிசி ஆலையின் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்பொருள் வாணிபக் கடிகம்; சிவகங்கை மண்டலத்தில் 2022-2023-ல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விலசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதற்கு சிவகங்கை மாவட்டத்தில் 62 நோடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 21.02.2023 வரை 19,365 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதில், 14,573 மெ.டன் நகர்வு செய்யப்பட்டு பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்முதலில் 4,549 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதில் 3,134 விவசாயிகளுக்கு ரூ.29.40 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பணமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மானாமதுரை பகுதிகளில் 25 இடங்களில் இயங்கும் நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு. நவீன அரிசி ஆலை வளாகத்தில் மேற்கூரை அமைப்பிலான நெல் மேடைகளில் சேமிக்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளது என ,மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அருண்பிரசாத், செயற்பொறியாளர் கே.ஆர்.முருகன், மேலாளர் ஆ.முத்துப்பாண்டி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *