• Fri. Mar 29th, 2024

காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் நெகிழி ஒழிப்பு திட்டம் 90 வது நாள் நிறைவு விழா

ByJawahar

Feb 22, 2023

காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி ஒழிப்பு திட்டம் 90 வது நாள் நிறைவு விழா முசிறி சட்டமன்ற உறுப்பினர் ந.தியாகராஜன் தலைமையில் நடைப்பெற்றது.
மதிப்பிற்குரிய திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப்குமார், காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியினை முற்றிலும் நெகிழியில்லா பேரூராட்சியாக உருவாக்கும் பொருட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவி வெப்பமயமாதல் ஆகியவற்றைத் தடுக்க, மறு சுழற்சிக்கு வழியில்லாத ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி ஒழிப்பு திட்டத்தினை மதிப்பிற்குரிய முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி திரு.ந.தியாகராஜன் அவர்கள் 24.11.2022 அன்று துவக்கிவைத்து பொதுமக்களிடம் நெகிழி பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனை தவிர்த்து மஞ்சள் பையினை பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதனை தொடர்ந்து 90 நாட்கள் தொடர்ந்து நெகிழி ஒழிப்பு தொடர்பான நிகழ்வுகள் நடைப்பெற்றது. நெகிழி ஒழிப்பு தொடர்பாக வணிக நிறுவனங்களுக்கு மாற்று பொருட்களான மஞ்சள் பைகள், சில்வர் பாத்திரங்கள் வழங்குதல், நேரடியாக ஆய்வு மேற்கொண்டு ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்கள் பயன்படுத்தினால் பறிமுதல் செய்து அபராதம் விதித்தல், பொதுமக்களிடம் விழிப்புணர் ஏற்படுத்துதல், மாணவர்களுக்கு விழப்புணர்வு ஏற்படுத்துதல், அனைவருக்கும் மஞ்சல் பையினை வழங்குதல் போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைப்பெற்றது.
நெகிழி ஒழிப்பு திட்டத்தின் 90வது நாள் நிறைவு நிகழ்ச்சியானது முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ந.தியாகராஜன் தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது. பேரூராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் மஞ்சள் பையினை வழங்கி நெகிழியினை தவிர்ப்பதனை குறித் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி.சு.சங்கீதா சுரேஷ், துணைத்தலைவர் திருமதி.சி.சுதா சிவசெல்வராஜ், இளநிலை உதவியாளர் இராஜேந்திரன், சித்ரா, பாரதியார், வரித்தண்டலர்கள் சர்மிளா, சதாசிவம், பதிவ எழுத்தர் மாணிக்கவள்ளி, துப்புரவு பணி மேற்பார்வையாளர் கண்ணன் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *