• Thu. Mar 28th, 2024

மண்ணின் மைந்தர்களுக்கு வேலை தருவதற்கு தயார்-விக்ரம ராஜா பேட்டி

ByKalamegam Viswanathan

Feb 22, 2023

இந்த மண்ணின் மைந்தர்களுக்கு வேலை தருவதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தயாராக உள்ளது. வேலை செய்வதற்கு அவர்கள் தயாராக வேண்டும். -தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்ரம ராஜா பேட்டி
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேராமைப்பு சார்பாக மதுரை மண்டல ஆலோசனைக் கூட்டம் மதுரை அவனியாபுரத்தில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. மேலும் வருகிற மே ஐந்தாம் தேதி வணிகர் சங்க பேரமைப்பின் 40 வது மாநில மாநாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்ரம ராஜா மற்றும் மதுரை திண்டுக்கல் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வியாபார சங்க நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்ரம ராஜா கூறுகையில்:
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் அத்துமீறுகிறார்கள். எண்ணை வித்துக்களில் பல்வேறு சாம்பிள் எடுக்க சொல்கிறார்கள், முறையான அறிவிப்பு இல்லாமல் குளறுபடிகள் ஏற்படுகிறது. அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்து பேசி வணிகர்களுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளும் சூழலை ஏற்படுத்த உள்ளோம். மே மாதம் வணிகர் சங்க பேரமைப்பின் 40 வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. அமைச்சர்கள் மற்றும் பல மாவட்டங்களில் இருந்து வணிகர்கள் பங்கேற்க உள்ளனர். கார்ப்பரேட்டுகள் சாமானியர்களை நசுக்கி கொண்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்றப்பட்டு வணிகர்களை காக்க வேண்டும் என்கிற விதமாக இந்த மாநில மாநாடு நடைபெற உள்ளது.
வடமாநிலத்தவர்களால் தமிழர்களுக்கான வேலை வாய்ப்பு கேள்விக்குறியாவது குறித்த கேள்விக்கு:
இந்த மண்ணின் மைந்தர்களுக்கு வேலை தருவதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தயாராக உள்ளது. வேலை செய்வதற்கு அவர்கள் தயாராக வேண்டும். நம்ம மாநிலத்தில் 50 விழுக்காடு படித்தவர்கள் இருப்பதால் வேலைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது, படித்த வேலைக்கு தான் செல்ல வேண்டும் அரசு வேலைக்கு தான் செல்ல வேண்டும் என ஒரு சிலர் இருக்கிறார்கள் அவர்கள் மனமாற்றம் அடைந்து எந்த வேலையும் செய்ய தயாராக இருந்தால் அவர்களுக்கு வேலை அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் ஆக்குவது குறித்த கேள்விக்கு:
பல இடங்களில் ரயில்கள் நிற்பதில்லை என்கிற புகார்கள் எங்களுக்கு வந்துள்ளது. மதுரை விமான நிலையம் 24 மணி நேர செயல்படும் நிலை ஏற்பட்டால் தென் மாவட்டங்களில் இருப்பவர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும். விமானத்திற்கு குறிப்பிட்ட தூரத்திற்கு 2500 ரூபாய் என பிரதமர் நிர்ணயித்திருந்தார் ஆனால் தற்போது பல்லாயிரத்தை கடந்து விட்டது. அதையெல்லாம் முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஏப்ரல் 13, 14 டெல்லியில் அனைத்து மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்திய துறை அமைச்சர்கள் பி.எஸ்.கோயல், சுகாதாரத் துறை அமைச்சர் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ரயில்வேபோக்குவரத்துத் துறை அமைச்சர்களை சந்தித்து உங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தவிருக்கிறோம்.
மத்திய அரசின் பட்ஜெட் குறித்த கேள்விக்கு:
மத்திய அரசின் பட்ஜெட் வணிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஒரு லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலித்தால் போதும் என பிரதமர் அறிவித்திருந்தார். ஆனால் இன்று ஒரு லட்சத்து 66 ஆயிரம் கோடி வசூலித்துக் கொடுக்கும் மனிதர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. வணிகர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டது ஆனால் அது வெளிவராமல் எந்தவித பயனும் இல்லாமல் உள்ளது. பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு இழப்பீடு மற்றும் ஓய்வு ஊதியம் அளிக்க வேண்டும் என நிதி அமைச்சரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினோம். இவையெல்லாம் பட்ஜெட்டில் வரும் என எதிர்பார்த்தோம் ஆனால் எதுவும் வராமல் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அதிகம் ஜிஎஸ்டி வரி கட்டும் வணிகர்களுக்கு அரசு சிறப்பு அங்கீகாரம் வழங்க வேண்டும். குறைந்தபட்சம் அவர்களுக்கு டோல் கட்டணம் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *