• Thu. May 21st, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

பாரிஸ் அன்னிய வேத போதக சபையின் 250 ஆம் ஆண்டு நிறைவு விழா..,

ByM.I.MOHAMMED FAROOK

May 20, 2026

பாரிஸ் அன்னிய வேத போதக சபை (Missions Étrangères de Paris – MEP) என்பது 17-ஆம் நூற்றாண்டில் பிரான்சில் நிறுவப்பட்ட கத்தோலிக்க மறைப்பணி அமைப்பாகும். ஆசிய நாடுகளில் (குறிப்பாக இந்தியா, சீனா, வியட்நாம், தாய்லாந்து) கிறிஸ்தவத்தை பரப்புவதற்காகவும், உள்ளூர் குருக்களை உருவாக்குவதற்காகவும் இந்த சபை உருவாக்கப்பட்டது.

போர்த்துக்கீசியர்களின் ஆதிக்கத்தை தவிர்ப்பதற்காக, 17-ஆம் நூற்றாண்டில் இந்த சபையின் குருக்கள் தரை மார்க்கமாக பாரசீகம் மற்றும் இந்தியா வழியாக ஆசியாவை அடைந்தனர். தமிழ்நாட்டில்: 18-ஆம் நூற்றாண்டில் (குறிப்பாக 1776-களில்) புதுச்சேரியை மையமாகக் கொண்டு தமிழகத்தில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினர். இயேசு சபை குருக்களுக்குப் பிறகு புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இவர்கள் திருச்சபை பணிகளை மேற்கொண்டனர். ஆன்மீகப் பணி மட்டுமின்றி, தமிழ் மற்றும் பிற ஆசிய மொழிகளில் அகராதிகள், இலக்கண நூல்கள், மற்றும் வேத போதனைகளை எழுதினர். பல புதிய தேவாலயங்களை பிரெஞ்சு கோதிக் கட்டிடக்கலை பாணியில் கட்ட பங்களித்துள்ளனர்.

இந்நிலையில் பாரிஸ் அன்னிய வேத போதக சபையின் 250 ஆம் ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து அதனை நினைவு கூறும் வகையிலும் கொண்டாடும் வகையிலும் காரைக்கால் புனித தேற்றருவு அன்னை ஆலயத்தில் வரும் 26 ஆம் தேதி பாரிஸ் அன்னிய வேத போதக சபையின் 250 ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற உள்ளதாக மாவட்ட பங்கு குரு பால் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் கடலூர் புதுச்சேரி மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் காலிஸ்ட் பங்கேற்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சி நாளன்று கொடி அணி வகுப்பு மற்றும் கொடியேற்றம் அதனைத் தொடர்ந்து பாரிஸ் அன்னிய வேத போதக சபை குறித்த கருத்தரங்கம் அதனைத் தொடர்ந்து காரைக்கால் புதுச்சேரியில் பணியாற்றிய குருக்களின் வரலாறு என 250 ஆண்டு வரலாற்றை நினைவு கூறும் வகையில் இந்நிகழ்வு நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.