திருப்பரங்குன்றம் தொகுதியில் தவெக சார்பில் சி டி ஆர் நிர்மல் குமார் வெற்றி பெற்று மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சராக உள்ளார். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மற்றும் திருநகர் பகுதியில் பல்வேறு இடஙகளில் பள்ளி, மருத்துவமனை, பேருந்து நிறுத்தம் ஆகியவற்றின் அருகில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகளை அகற்ற கோரிக்கை இருந்து வந்தது.

ஆனால் இங்கு பள்ளிகளுக்கு அருகில் பெண் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள டாஸ்மாக கடைகள் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது குறித்து இப்பகுதியினர் அரசுக்கும், அமைச்சருக்கும் கோரிக்கை வைத்த நிலையில் அது கண்டுகொள்ளப்படவில்லை. இதனைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் சுற்று வட்டார பொதுமக்கள் நலச்சங்கம் என்ற அமைப்பின் சார்பில் திருப்பரங்குன்றம், திருநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அருகில் உள்ள மதுக்கடைகளை உடனே அகற்று.

மாணவிகளின் பாதுகப்பை உறுதி செய் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைராலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அமைச்சர் தொகுதிக்குள் மதுக்கடைகளை அகற்றக்கோரி சமுக வலைதளத்தில் போஸ்டர் வைரலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




